துப்பாக்கி சுடும் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!!

தூத்துக்குடி : காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (15.09.2025) மற்றும்  (16.09.2025) ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியன், 11வது பட்டாலியன், மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

மேற்படி துப்பாக்கி சுடுதல் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்படி மாவட்டம்/நகரம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் என மொத்தம் 22 காவல்துறை உயர் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts