நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்!!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஓவிய ஆசிரியர் ச.த.கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ச.த.கல்யாணசுந்தரம் நல்லாசிரியர் விருது பெற்றார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ம்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழகம் முழுவதும் 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், கடந்த 5ம்தேதி வழங்கினார். இதில், கழுகுமலை அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் ச.த.கல்யாணசுந்தரம் என்ற ஆசிரியருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

அவருக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் ஒன்றிய செயலாளர் கழுகுமலை ஆர்.காளிராஜ் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், முன்னாள் மாணவர்கள் சார்பாகவும், SMC குழு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts