பொள்ளாச்சி அருகே பழங்குடியினர் மருத்துவ வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கோழிமுட்டி, எருமை பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மருத்துவர் மற்றும் செவிலியர் பணியில் உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் அல்லது உடல்நல அவசரங்கள் ஏற்பட்டால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவசர மருத்துவ சேவை பெறும் வரை நேரம் தாமதமாகி மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தங்களது பகுதிக்கு இரவு நேரத்திலும் மருத்துவர், செவிலியர் பணியாற்றும் வசதி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரி பெண்கள் குழுவாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மருத்துவ வசதி நம் ஆரோக்கியத்தை காக்கும் உயிர் காப்பகம்.
நம்பிக்கை, நவீன சிகிச்சை, நலம் தரும் இடம் என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts