
கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் கேரளா அரசுப் பேருந்தின் கண்டக்டர் ஒருவர் உணவு கழிவுகளைப் பேருந்து நிலையத்திலேயே வீசியெறிந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளாவிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்த கேரள அரசுப் பேருந்தின் கண்டக்டர் பேருந்து நிறுத்தம் அருகில் தான் சாப்பிட்ட உணவுப் பொட்டலங்களைக் குப்பைக் கூடையில் போடாமல் பேருந்து நிலையத்தின் நடைபாதையிலேயே அலட்சியமாகக் கீழே வீசி எறிந்துள்ளார்.
இந்தச் செயலைக் கண்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரை உடனடியாகக் கேள்வி கேட்டுள்ளார். கேரளாவில் இதே போல்
குப்பையை வீசினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் நீங்கள் தமிழகத்தில் இப்படிச் செய்வது நியாயமா என்று அவர் கேட்டார்.
மேலும் அந்த இளைஞர் குப்பையைக் கையில் எடுத்து கண்டக்டர் எந்த இடத்தில் இருந்து குப்பையை வீசினாரோ அதே இடத்தில் அதை மீண்டும் வைத்தார்.
சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது இந்தச் செயல் குறித்து கண்டக்டர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. அந்த இளைஞர் செய்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இது மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு பாடமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












