
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் பாரளை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிற்சாலை வழியாக வந்த கரடி ஆட்களை தாக்கி ஓடி விட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கரடியைக் கண்டு குடையால் விரட்டினார்கள். இல்லையெனில் அது மூவரில் ஒருவரை தாக்கியிருந்திருக்கும்.
தொழிற்சாலை வழியாக கரடி ஒடி வரும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காணொளி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதிகளில் செல்லும் நபர்கள் குடை, குச்சி,பெல்ட் இதில் எதாவது ஓன்று பாதுகாப்புக்காக கருதவேண்டும் என்று இந்த காணொளியை பார்க்கும் மக்கள் நினைப்பார்கள்.
காட்டெருமை, கரடி, சிறுத்தை புலி போன்ற விலங்குகள் வால்பாறை வட்டார பகுதியில் அதிக அளவு நடமாட்டம் உள்ளது. இதனை கருத்தில்க் கொண்டு முக்கியமான பகுதிகளில் கூண்டு வைத்து பிடித்து அவைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விட வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையிலிருந்து
-பேபி.












