
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தென் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வாலயத்தில் 23ம் தேதி செவ்வாய்கிழமை முதல் கொலு அலங்காரம், தினசரி அம்பாள் ஒரு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். தினசரி இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவுகள் நடைபெறும்.
இன்று முன்றாம் நாள் நவராத்திரி திருவிழாவில் ஸ்ரீ துர்க்கை அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மூன்றாம் நாள் லட்சார்ச்சனை விழா உபயதாரர் N.கோவிந்த சுப்பிரமணியன் & N. ராமநாதன், கஸ்தூரி விலாசம், கோவில்பட்டி மற்றும் உற்சவர் கொலு அம்பாள் நவராத்திரி விழா உபயதாரர் P.பாலசுப்பிரமணியன் ஆடிட்டர், கோவில்பட்டி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்
மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












