வால்பாறைக்கு நவம்பர் 1 முதல் இ-பாஸ் கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறைக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் இ-பாஸ் முறை கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாசஸ்தலங்களில் ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ள நிலையில் வால்பாறையிலும் இதனை செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆனைமலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் வால்பாறை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியின் இயற்கை வளங்கள், வனவிலங்குகள், மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.https://nalaiyavaralaru.com/2025/09/ஒரு-இயக்குனரின்-வாழ்க்கை/ ‎

அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டுப்பாடற்ற சுற்றுலா நடவடிக்கைகளும் அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீர்குலைக்கக்கூடும் என நீதிமன்றம் கவலை தெரிவித்தது. அரசுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:
நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறை வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன விவரங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.
பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை வால்பாறைக்கு செல்லும் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழிப்புணர்வு பிரசாரம் சுற்றுலாப் பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு நடத்த வேண்டும்.
தினசரி வாகன எண்ணிக்கை கட்டுப்பாடு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வால்பாறைக்கு தினசரி அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.
இந்த புதிய கட்டுப்பாடுகளால், வால்பாறையின் இயற்கை வளம் பாதுகாக்கப்படும் என்றும் சீரான சுற்றுலா மேலாண்மை சாத்தியமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசுசு ற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அனைவரும் இணைந்து இந்த நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உங்கள் செய்தியாளர்

𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts