
கோவை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், கோவை மாவட்ட நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியும், வால்பாறை நீதிமன்றத்தில் முதன் முறையாக தேசிய மக்கள் நீதிமன்றம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திரு. ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மக்கள் நீதிமன்றம் குறித்து அவர் விளக்கிப் பேசினார். கோவை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி. விஜயா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுடனும் காணொளி காட்சி மூலம் இணைக்கப்பட்டு நடத்தப்பட்டன.
வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி திருமதி. மீனாட்சி அவர்கள் தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தையும் அதன் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார். வழக்குகளில் உள்ள இரு தரப்பினரும் நேரில் சுமூகமாகப் பேசி தீர்வுகாண இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும், விரைவாக வழக்குகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால், வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வில் பேனல் வழக்கறிஞர்களான திரு. பெருமாள், திரு. சிவசுப்ரமணியம் மற்றும் சட்டப் பணிகள் குழு உறுப்பினர் வழக்கறிஞர் திரு. விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கு விசாரணைகள் மற்றும் அபராதங்கள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தல், கள்ள மது விற்பனை, பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட 61 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக மொத்தம் ரூ. 93,600 விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை வழக்கறிஞர்களான திரு. முருகன், திரு. முத்துசாமி, திரு. பால்பாண்டி, திரு. வினோத்குமார், திருமதி. சுமதி, திருமதி. முத்துகிருஷ்ணம்மாள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் சட்டப் பணிகள் தன்னார்வலர்களான திரு. சுரேஷ், திரு. முனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்கள்,
-P.பரமசிவம். -திவ்யக்குமார்.












