விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு!!

விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இளையரசனேந்தல் ரோடு தரை பாலத்தில் விபத்தை தடுக்க சுவர் கண்ணாடி அல்லது தம்புல்ட்டு ஸ்பீட் பிரேக்கர் அமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகர செயலாளர் தலைமையில் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை அலுவலகத்தில் கோட்ட கண்காணிப்பாளர் மரிய ஜேம்ஸ் ராஜ் அவர்களிடம் மனு அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில்;

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு தரை பாலம் வழியாக இளையரசனேந்தல்,திருவேங்கடம்,ராஜபாளையம் மற்றும் சாத்தூர்,சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஞ்சு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றது.

காலையிலும், மாலையிலும் இந்த வாகனங்கள் அதிகமாக செல்வதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே இந்த பகுதியில் சுவர் கண்ணாடி அல்லது தம்புல்ட்டு ஸ்பீட் பிரேக்கர் அமைத்தால், வாகனங்கள் நின்று செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

எனவே இளையரசனேந்தல் ரோடு தரை பாலம் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் மரிய ஜேம்ஸ் ராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இளையரசனேந்தல் ரோடு அணுகுசாலை அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்துமாறும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதில், மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன் மற்றும் விஜயலட்சுமி,AIYF தங்க மாரியப்பன்,முத்துராஜ், AITUC மாரியப்பன்,சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts