விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது அதில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் மதுரை திருநெல்வேலி திருப்பூர் திருச்செந்தூர் விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 15 குதிரைகள் வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து ஓடியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை ராமநாதபுரம் விருதுநகர் திருநெல்வேலி புதுக்கோட்டை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பூஞ்சிட்டு போட்டியில் 48 ஜோடி மாடுகளும் தேன் சிட்டு போட்டியில் 15 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தனர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூசனூர் கிராமத்தில் இருந்து விளாத்திகுளம் வரை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் மாட்டு வண்டி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் இமானுவேல் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் அதேபோல் குதிரை வண்டி பந்தயத்தை ராஜாக்கண்ணு தொடங்கி வைத்தார் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளருக்கு ரொக்க பணம் குத்துவிளக்கு சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த ஏற்பாட்டை அந்த ஊர் பொதுமக்கள் திருவிழா குழு கமிட்டியாளர்கள் ஏற்பாடு செய்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts