
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பிரிவு அருகே அமைந்திருக்கும் கல்வி நிறுவனமான வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இன்று மாணவர்கள் உயர்வுக்கு படி ஊக்குவித்தல் மற்றும் பள்ளி சிறந்த ஆசிரியர்களுக்கான ஆச்சாரியா விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கௌரவ விருந்தினராக முனைவர் N. செண்பகவல்லி அவர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் கோயம்புத்தூர்). திரு.ஜே.சுபாஷ் அவர்கள் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் கோயம்புத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் கிரியப்பனவர் I.A.S அவர்கள் கலந்து கொள்ள இருந்தார் ஆனால் சில அலுவலர் பணி காரணமாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள முடியவில்லை எனினும் அவருடைய வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார்.
இந்த விழாவினை சீர்மிகு நா. சூரியகுமார் (நிர்வாக அறங்காவலர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் தலைமை உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து முனைவர் த. கலைவாணி (முதல்வர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் து.பிருந்தா (இயக்குநர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில் சுமார் 20 மாணவர்கள் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலமாக நீ கல்லூரியில் இடைநிற்றலை தவிர்த்து கல்லூரியில் சேர்ந்து கல்லூரி படிப்பை பயில கல்லூரி ஆனது வாய்ப்பளித்துள்ளது பெருமைக்குரியது.
சுமார் 160 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விருதை பெற்றுக் கொண்டனர். இதில் நிர்மலா மாதா பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் திரு. ஜான்சன் மற்றும் சுதன் சுந்தர் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர். திரு ஜான்சன் அவர்கள் மூணாறு நாளைய வரலாறு புலனாய்வு செய்தியின் நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.












