
தூத்துக்குடி மாவட்டம் : 19.09.2025
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு – இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த சபரி மகன் இசக்கிமுத்து என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி திருமதி. பீரித்தா அவர்கள் இன்று (19.09.2025) குற்றவாளி இசக்கிமுத்து என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 10,000 அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. ரபிலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












