
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் அருகே KTK Polymers அருகில் கடந்த வெள்ளிக்கிழமை 10.10.25 அன்று பகல் நேரத்தில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினைப் பறித்துச் சென்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறிபோனது கவரிங் செயின் என்றாலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய துரித விசாரணையில் மேற்கண்ட குற்ற வழக்கில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த கோகுல் தாஸ் (26) மற்றும் அமல் (25) ஆகிய இருவரையும் ஆனைமலை காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை விரைவாக கைது செய்த ஆனைமலை காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











