
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நவி மும்பையில் நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸி. அணி 49.5 ஓவரில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்காக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் சாரனி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட், கிராந்தி கவுத், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்திய ஜெமிமா 134 பந்தில் 127 ரன்கள் (14 பவுண்டரி) எடுத்தார். அமன்ஜோத் கவுர் 8 பந்தில் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை (339 ரன்கள்) வெற்றிகரமாக எட்டிய அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த போட்டியில் ஜெமிமா பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி நவம்பர் 2 அன்று இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.












