தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு அளப்பறியது – மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!

தூத்துக்குடி நகராட்சியாக இருந்த நிலையில் 2008ம் வருடம் ஆகஸ்ட் 5-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து தூத்துக்குடி மாநகராட்சியாக முதலமைச்சர் மு.கருணாநிதி நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்பின் சில ஆண்டுகள் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் எந்த பணிகளும் நடைபெறாத நிலையில் 2021ல் தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ராம்நகர், முத்தம்மாள் காலனி, பிரையண்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்தது.

அதன்பின் நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 60 வார்டுகள் உள்ளடக்கிய பகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 53 வார்டுகளில் வெற்றி வாகை சூட்டியது. இதனையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 44 மாத காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நலன் கருதி எந்த அடிப்படை பணிகளையுமே முறையாக செய்யவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி என்பது மிகப்பெரிய தொழில் நகரமாகும் குறிப்பாக விமான போக்குவரத்து, துறைமுகம், இரயில்வே, சாலை போக்குவரத்து என நான்கு கட்டமைப்புகளும் ஒருங்கே அமைந்திருப்பதால் உள்நாடு, வெளிநாடு வர்த்தகம் நிறைந்த பகுதியாக இருப்பதால், எல்லா தரப்பினரும், வந்து செல்லும் தன்மைக்கேற்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலில் முடிவு செய்தோம். அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி எந்த பணிகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் பகுதிகளில் தரமான சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம். பின்னர் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் வி.இ.ரோடு, அண்ணாநகர் மெயின்ரோடு இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இலகு ரக, நான்கு சக்கர வாகனமும், இரு சக்கர வாகனமும் நிறுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். சில முக்கிய சாலைகளில் எண்ட் டூ எண்ட் என்ற முறைப்படி மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டு பிரதான சாலைகள் தார் மூலம் முறைப்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மீண்டும் அதே போல் நிலை வரக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு சென்ற இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி அப்பகுதிகளில் புதிய சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். மழைநீர் கடலுக்குச் செல்லும் வகையில் 11 புதிய கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி உள்ளோம். சுமார் 6 கி.மீ தூரத்திற்கு பக்கிள் ஓடை முழுமையாக தேவையற்ற கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2006 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பக்கிள் ஓடையில் பல பகுதிகளை விரிவாக்கம் செய்துள்ளோம். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வந்த 18226 தெருவிளக்குகள் 15வது சிஎப்சி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2887 மற்றும் இதர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் என சேர்த்து தற்சமயம் மொத்தம் 21759 தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், பல வழிகளில் தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி உள்ளோம். கோரம்பள்ளம் குளம் நிரம்பி முள்ளக்காடு, முத்தையாபுரம் வழியாக கடலுக்குச் செல்லும் 12 கி.மீ தூரம் வழித்தடம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் பழைய பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு வகையில் அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். மொத்தத்தில் 206 பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வரும். தற்போது பொதுமக்கள் அதிகம் வந்தும் செல்லும் பகுதிகளில் புதிதாக 420 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்த கட்டமான 400 சாலைகள் அமைக்கப்பட உள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதுள்ள சாலை உயரத்திற்கு ஏற்றாற்போல் 8 அடி, 9 அடி ஆழத்தில் புதிய கருப்பு மற்றும் ப்ளு பைப் மூலம் நல்லமுறையில் மக்களை பாதிக்காத வகையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வல்லநாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த 1வது மற்றும் 2வது பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் 3வது மற்றும் 4வது பைப் லைன் மூலம் தான் இங்கு தண்ணீர் வருகிறது. அப்படியிருந்தும் தினசரி தண்ணீர் வழங்கிக் கொண்டு வருகிறோம். 60 வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து கால்வாய்களில் தேங்கியுள்ள மணல் திட்டுகள், கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் மழை பாதிப்பு இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறிய குறுகளான பகுதி முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கேரி பேக், கப் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் அனைவரும் எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி தவிர்க்க வேண்டும். மேற்கண்ட எல்லா பணிகளுக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உறுதுணையாக இருந்தமைக்கு மாநகராட்சி சாhபில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி புகழராம் சூட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts