
கோவில்பட்டியில் கே.ஆர் கல்லூரி நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டி
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Dr.S.குருராஜ் தொடங்கி வைத்தார்.
3:2 என்ற கோல் கணக்கில் கே.ஆர்.கல்லூரி முதல் இடத்தை பிடித்து பரிசு கோப்பையை தட்டி சென்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ண நகரில் அமைந்துள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கிப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 9 கல்லூரிகள் பங்கேற்றன. இங்கு நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன.
நேற்று காலை முதல் போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டிம் கல்லூரியும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியும் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.டிம் கல்லூரி 3 வது இடத்தையும், சேவியர் கல்லூரி 4 ம் இடத்தையும் பிடித்தது.
இறுதி போட்டியில் கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவில்பட்டி அரசு கலை கல்லூரி அணிகள் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் கே.ஆர்.கல்லூரி முதல் இடத்தையும் அரசு கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Dr.S.குருராஜ், Ph., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கே.ஆர்.கல்லூரியின் இயக்குனர் டாக்டர். சண்முகவேல், கல்லூரியின் முதல்வர் மதிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கே.ஆர்.கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ராம்குமார் நன்றிரை வழங்கினார்.
போட்டி ஏற்பாடுகளை கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச்சலம், முதல்வர் மதிவாணன், உடற்கல்வி இயக்குனர் ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












