
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தஞ்சாவூர் சார்பில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தியாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் இதுகுறித்த துண்டு பிரசுரம் மற்றும் மீண்டும் மஞ்சப்பை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி. வேதா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன், வட்டாட்சியர் திரு. சிவகுமார், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் பொறியாளர் முத்துக்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி மேலாளர் திரு. மோகன், பசுமை ஒருங்கிணைப்பாளர் செல்வி. கனிமொழி, தானம் அறக்கட்டளை செயலாளர் திரு. கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலமுருகன் தஞ்சாவூர்.











