மூணாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மின்சார இணைப்பு!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் இரண்டு மாதமாக மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் மாணவர்களும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் பெரிய பாதிப்புக்குள்ளாயினர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் இறந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம் மற்றும் கட்டிடங்களின் நிலை குறித்து அனைத்து தரவுகளையும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்ட நிலையில் மூணார் பகுதியில் நிரந்தர அனுமதி எண் இல்லாமல் அமைந்திருக்கும் கட்டிடம் என்று கூறி மின்சாரம் துண்டிக்கப்பட்டது தற்பொழுது அங்கு உள்ள பஞ்சாயத்து மற்றும் பல தலைவர்கள், ஊடகத்துறை மற்றும் பொதுமக்களின் உன் குரலோடு தற்பொழுது மூணாறு அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு நிரந்தர பதிவு எண் வழங்கப்பட்டு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கே படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளை மாணவர்கள் சார்பில் ஆசிரியர் சார்பிலும் தெரிவிக்கப்பட்டன.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளை வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts