வரும் 28ந்தேதி கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர் இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் திமுக நகர கழகத்திற்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் 2 மேல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வரும் 28ந்தேதி மாலையில் கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிறைவுற்ற புதிய கட்சி அலுவல கட்டிட பணிகளையும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதன் பின்பு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசியயில் கட்சித் தலைமையின் ஒப்புதலோடு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரின் பங்களிப்புடன் கோவில்பட்டி நகர திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையும், அலுவலகத்தின் ஒரு பகுதியில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் இருந்து நூலகத்திற்கான அத்தனை புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. வரும் 28ஆம் தேதி மாலையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையும் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts