வால்பாறையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் ஒரு விரல் புரட்சி செய்ய அறைகூவல்

​கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் கென்னடி தலைமையில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளரும் வால்பாறை ஐடி முதல்வர் நடராஜ் முன்னிலையில் ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
​ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம், TESTE செயலாளர் இராஜபாண்டியன், வால்பாறை சி.ஐ.டி.யு (CITU) சங்கத்தின் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


​அப்பொழுது பேசிய தலைவர்கள் கடந்த தேர்தலில் சாமானிய அடித்தட்டு மக்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பல அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்றனர் ஆனால் இன்று அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. வருகின்ற தேர்தலில் ஒரு விரல் புரட்சி செய்தாலே நமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறினார்கள்.

இது அனைவரும் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், சாமானிய மக்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘ஒரு விரல் புரட்சி’ செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

​10 அம்சக் கோரிக்கைகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்.) மீண்டும் அமல்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.
​இதில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை, மருத்துவம், அங்கன்வாடி, சத்துணவு, சாலைப் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் முத்தையா இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முடிவில் ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts