வால்பாறை அருகே பள்ளிக் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகளால் பரபரப்பு !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள உருள்கள் மேல் பிரிவு பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்பறைகள் உள்ளது. அப்பகுதியில் நேற்று காலை உலா வந்த காட்டு யானைக் கூட்டம் அந்த பள்ளிக்கூடத்தில் பொருள்களை சேதப்படுத்தியது. பின்பு பள்ளிக்கூடத்தில் உள்ள சத்துணவு அறையில் உணவு பொருட்கள் தேடியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காணPlease Subscribe to This Channel to get current news↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதி மக்கள்  விரைந்து வந்து வனவிலங்கு அதிகாரிகளுடன் யானைகளை விரட்டி அடர்ந்த சோலைகளுக்குள்  விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கூடத்தை புதுப்பித்து தருமாறு வால்பாறை நகராட்சி ஆய்வாளர்களிடம் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இது போன்று அடிக்கடி வால்பாறை வட்டார பகுதிகளில் காட்டு யானைகள், பள்ளிக்கூடம் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இதனைக் கண்டு இப்பகுதியில் வனவிலங்கு காப்பகர்கள் பாதுகாப்பு அதிக அளவு நல்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts