
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா மட்டுமே 68 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி
13.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா
அணிக்காக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது போட்டி வரும் நவம்பர் 2ஆம் தேதி ஹோபர்ட்டில் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.












