
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவலில் நான்காவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 28 ரன்களும், ஷிவம் துபே 22 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை (சனிக்கிழமை) பிரிஸ்பேனில் நடக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.












