
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ள நிலையில்
ஒருநாள் தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின்போது ஏற்பட்ட திடீர் வலியால் வெளியேறி தொடரைவிட்டு விலகிய
கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டாததால் இந்த தொடரில் ஆடவில்லை.
இதனால் லோகேஷ் ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.
முதல் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு












