உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி!!

பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இந்திய அணி. இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts