ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு!!

10-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். அதில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதியில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் களம் காணும். இந்த தொடரின் முதல் போட்டி பிப். 7ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

இறுதி போட்டி மார்ச் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், சென்னை கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு மற்று கண்டியிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts