தேவர் ஜெயந்தி முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் தேவர் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு 14ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கே பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள ராமநாடு மதுரை சிவகங்கை தூத்துக்குடி விருதுநகர் தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொண்டனர். இந்தப் பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் நடு மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அடுத்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை ஒன்றிய செயலாளர் இமானுவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இந்தப் பந்தயம் பூசனூரில் இருந்து விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது. நடு மாட்டு வண்டிக்கு போக வர தூரம் 8 மயிலாகவும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போக வர தூரம் 6 மயிலாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ஓட்டி வந்த சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தில் சுப்பிரமணியத்தேவர் பரமசிவ தேவர் பசும்பொன் பழனிச்சாமி திருப்பதி முனியம்மாள் கருப்பசாமி பாண்டியன் முத்துராமலிங்கம் திருநாவுக்கரசு இசக்கி சரவணன் வீரலட்சுமி சந்தானராஜ் காசிராஜன் துர்காம்பிகா சீவலப்பேரி தண்டபாணி பாலமுருகன் நல்ல சிங்கம் சக்திவேல் கோட்டை பாண்டியன் முனியசாமி மாரிமுத்து என்ன பரிசுகள் வழங்கினார்.

இதில் தேவர் இளைஞர் பேரவை மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர் சாலை இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டு வண்டி சீறிப்பாய்வதை பார்த்து மகிழ்ந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts