
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புளியமரத்து அரசடியில் ரேக்ளா செல்வம் நினைவாக ஊர் பொதுமக்கள் நடத்தும் 2ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை அ.தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் விழா கமிட்டியினர்கள் ஊர் தலைவர் கேவிகே.சாமி, சுடலை, செல்வம், சதீஷ் ஆண்டிராஜ், இசக்கிமுத்து, சந்தனக்குமார், ராமர், மூர்த்தி, மாரிமுத்து, அஜித்குமார் ஆகியோர் வரவேற்றனர், இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் மேல அரசடி ரோகிணி கதிர்வேல், முறம்பன் சுடலைமணி, கவர்னகிரி பாலமுருகன், புளியமரத்து அரசடி முத்துப்பாண்டி, மேல அரசடி ஊராட்சி செயலாளர் பழனிமுருகன் இன்ஜினியர் தாமோதரன், சூரியா, சக்தீஸ்வரன், தினேஷ்குமார், சபேஸ், செல்வம், ராஜரிஷி, விஷ்வா, வர்ணனையாளர்கள் கருப்பசாமி, முருகன், காசிராஜன் மற்றும் பார்வையாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












