விளாத்திகுளம் அருகே முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 118 வது பிறந்தநாள் விழா மற்றும் 63 வது குருபூஜை ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மதுரை,தேனி,ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி,விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 72 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது,பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் ஏராளமான பந்தய ரசிகர்கள் பந்தயத்தினை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தினை கிராம பொதுமக்கள் மற்றும் விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts