
விளாத்திகுளம்: தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்(18/11/25) நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் சேர்மக்கனி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி கல்வி மாவட்டத் தலைவர் இரவீந்திர ராஜன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி சங்கம் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சேகர் அரசு ஊழியர் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.தமிழக ஆசிரியர் க்கூட்டணி மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சிங் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் இராஜா முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க விளாத்திகுளம் துணைத் தலைவர் நல்லையா வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரும் ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.ஆர்பாட்டத்தின் நன்றியுரை விளாத்திகுளம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விளாத்திகுளம் வட்டாரத் தலைவர் மு.க.இப்ராஹிம் ஆற்ற கூட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












