சாமியார் வட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நில ஒளி டிரஸ்ட் சார்பில் புத்தாடை மற்றும் கேக் வழங்கல்!!

கன்னியாகுமாரி மாவட்டம் சாமியார் வட்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் தாய் மற்றும் தந்தையை இழந்த சுமார் 50 மாணவச் செல்வங்களுக்கு நில ஒளி டிரஸ்ட் சார்பில் புத்தாடைகள் மற்றும் கேக் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு நில ஒளி டிரஸ்ட் நிறுவனத் தலைவர் Dr. K. புனிதவள்ளி அவர்கள் தலைமை தாங்கினார் டிரஸ்ட் CEO திரு. ஜார்ஜ் அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

​இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினர்
​டாக்டர் பினுலால் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்,
​திரு. இசையாஸ் காட்டாத்துறை பேரூராட்சி தலைவர்,
​திரு. சாமுவேல் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர்,
​திரு. K. சாந்தலிங்கம் நில ஒளி டிரஸ்ட் கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
​திரு. ஜெப தாஸ் முன்னாள் காட்டாத்துறை ஊராட்சி துணைத் தலைவர்,

​மேலும் நில ஒளி டிரஸ்ட் பணியாளர்கள் வினிதாராணி, ஷீஜா, கண்மணி, சைஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
​பெற்றோரை இழந்து வாடும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்த இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts