சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை!!

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் தெப்பக்குளத்திற்கு செல்லும் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த குப்பைகளால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அந்த இடத்தின் அருகில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. தினந்தோறும் மேற்கண்ட சாலையின் வழியாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் அவ்வழியாக செல்கின்றனர்.

இந்த இடம், ஏற்கனவே பராமரிப்பின்றி இருப்பதால் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளில், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைகின்றன. அவ்வப்போது மழை பெய்வதால் கொட்டப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி, குடியிருப்பு மக்கள் தவிக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகத்தினர் அங்குள்ள குப்பை, கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பை கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர தாலுகா குழுக்கள் சார்பாக நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார், கோவில்பட்டி

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts