தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து  3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்  செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக அந்த அணியின் தரப்பில் டிகாக் 106, பவுமா 48 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா அரை சதம் 75 ரன் அடித்தார். விராத் கோஹ்லி  65 ரண்களும் ஜெய்ஸ்வால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 116 ரன் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts