நகராட்சி சொத்துக்களின் அவல நிலை கண்டு நடவடிக்கை எடுப்பார்களா..?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட டிராக்டர் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. அதை போல் முன்னாள் கண்ணாடி ஓய்வு மாளிகை அருகாமையில் ஜெனரேட்டறும் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது போன்ற நகராட்சிக்கு சொந்தமான பொருள்கள் சிதறி கிடக்கின்றது. இதனை கருத்தில்க் கொண்டு அப்பகுதியில் உள்ள பொருட்களை நகராட்சி ஆய்வாளர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  புகார்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அவைகளை சமூக விரோதிகள் உடைத்து விட்டு இரும்பு கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து மது வாங்க பயன் படுத்தும் அவல நிலை உருவாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நகராட்சிப் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts