
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டி திரு. ஆனந்தராஜ் அவர்களின் தோட்டத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு வீரவணக்கம் மற்றும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கத்தின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்த மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. A.S. பாபு அவர்களின் இல்லத் திருமண விழாவிற்கான அழைப்பிதழ் சங்க உறுப்பினர்களுக்கும் விவசாயிகளுக்கும் முறைப்படி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் திரு. ஜி. முருகானந்த கிருஷ்ணன், திரு சாந்தலிங்கம் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











