
கோவை
போத்தனூர் கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரயில் மணிகண்டன் சுவாமி திருக்கோயிலில் நேற்று தங்கத்தேர் ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மணிகண்டன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேள தாளங்கள் ஊர்வலத்தின் போது செண்டை மேளம் மற்றும் பாரம்பரிய மேள தாளங்கள் முழங்க உற்சாகமான சூழலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஊர்வலம் சென்ற வீதியெங்கும் பக்தர்கள் தேங்காய்ப்பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












