மாவட்ட கவுன்சிலர் G.பிரியா, S.குருராஜ் Phd., நிதி உதவி!!

கயத்தாறு அருகே, தோட்டத்தில் வேலை பார்த்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி படுகாயமடைந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு அருகே உசிலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை (வயது 55). இவர் உசிலங்குளம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே சென்ற மின் கம்பியை தொட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்த அவருக்கு தலை, கால், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட விவசாயி செல்லத்துரையை மாவட்ட கவுன்சிலர் G.பிரியா, S.குருராஜ் Phd., திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மருத்துவரிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்து பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு தன் சொந்த நிதி அளித்து ஆறுதல் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











