
வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையார், உபாசி, ஹை ஃபாரஸ்ட், பன்னிமேடு, மானாம்பள்ளி, பவர்ஹவுஸ், ஊசி மலை போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி தொழிலாளர்கள், நகராட்சியின் அடிப்படை சேவைகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாமலும் தெருவிளக்குகள் இல்லாமலும் அடித்தட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த காலங்களில் நகராட்சி மூலம் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எளிதில் கிடைத்து வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை இப்போது பல்வேறு சான்றிதழ்களைக் கோருவதால், சாமானிய தொழிலாளர்கள் அதனைப் பெறுவதற்குச் சிரமப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

வால்பாறையில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரைக் காண்பதே அரிதாக உள்ளது என்றும் அவர் வரும்போதெல்லாம் ஒப்பந்ததாரர்களும், நகர மன்ற உறுப்பினர்களும் மட்டுமே உடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பாவி மற்றும் அடித்தட்டு மக்கள் தங்களின் குறைகளை நேரடியாகத் தெரிவிக்க முடியாமல் சிரமப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை
இதை கருத்தில் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி வால்பாறை P.பரமசிவம் நகராட்சி ஆணையரிடம் நேரடியாக ஒரு பொதுநலக் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பொதுமக்களைச் சந்திப்பதற்கான நேரத்தை அறிவிப்புப் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு உள்ள இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சாமானிய மக்களுக்குப் பலன் கிடைக்குமா?
நகர உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஆணையருடன் இருப்பதால் சாமானிய மக்களுக்கும் இப்பகுதி மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆணையர் இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிக் குறைபாடுகளைச் சரிசெய்து பொதுமக்களைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கி அடித்தட்டு மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்கள் செய்தியாளர் உங்கள் சுரேஷ் குமார்.












