
தமிழக முதல்வருக்கு வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி மற்றும் புதிய கோரிக்கை மனு
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடரும் மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் துரித நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்குழுவில் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறையில் வனவிலங்கு தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணக் கோரி கடந்த 11-12-2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இதனை உடனடியாகப் பரிசீலனை செய்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள் எஸ்டேட் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதற்கு வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் வால்பாறை செயலாளர் P.பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனினும் எஸ்டேட் பகுதிகளில் வாழும் அடித்தட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் சந்திக்கும் துயரங்களையும் வனவிலங்கு தாக்குதலால் ஏற்படும் விளைவுகளையும் நாங்கள் நேரடியாகக் கண்டு வருகிறோம் உயர்மட்டக் குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு இக்கஷ்டங்கள் முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை
எனவே இந்த உயர்மட்டக் குழுவில் இப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் நகர்மன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைக்க வேண்டும். அப்போது தான் சாமானிய மக்களின் குறைகள் நேரடியாக அதிகாரிகளிடம் சேரும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து இக்குழு செயல்பட்டால் மட்டுமே தொழிலாளர்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாகும்.
இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வால்பாறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












