
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட கோதுமை நாகப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
🟢click here to watch the fulll video
உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மிகுந்த தொழில்முறை திறனுடனும் கவனத்துடனும் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட அந்த கோதுமை நாகப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாம்பு பிடிபட்ட பிறகு அதனை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கான நடவடிக்கைகளைத் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இன்றிப் பாம்பைப் பிடித்துச் சென்ற தீயணைப்புத் துறையினருக்கு தங்கள் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தமைக்காக வாழைத்தோட்டம் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
– பேபி, வால்பாறை.











