விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு!!

விளாத்திகுளம்: டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாள் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர் சார்பில் கொண்டாடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் தொகுதி அமைப்பாளர் ஆ.சடையாண்டி தலைமையில் அண்ணல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் சபாபதி, விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ரெஸ்லி வில்லாளன், பரமசிவன், இளையராஜா தினேஷ் வளவன் பாலமுருகன் சண்முகராஜ் சந்திரசேகர் தினேஷ் மதன் ராஜவேல் ரமேஷ் சுந்தர் சிவா, மற்றும் விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts