‘வெற்றியாளர்களை நோக்கி உலகம் ஒரு நாள் வரும்’! – மாணவ – மாணவிகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வெற்றியாளர்களை நோக்கி உலகம் ஒரு நாள் வரும் என்ற பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ – மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு குளத்துவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் செல்வன்.நவீன் அவர்களுக்கு மடிக்கணினியும், செல்வன்.ஸ்ரீபதி அவர்களுக்கு ரூ.65000 ஊக்கத்தொகையும் வழங்கி கல்லூரி மாணவ – மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி,செல்வராஜ், ராமசுப்பு,இமானுவேல் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஆகாஷ்பாண்டியன் மற்றும் பிரதீபா, புதூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்,டெல்லி சட்ட கல்லூரி மாணவர் அக்க்ஷய் உள்ளிட்ட கல்லூரி,மாணவ – மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts