
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை தென்பகுதியில் வசித்து வரும் தர்மராஜ், விமலா என்பவர்கள் மாடு வளர்த்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் இரவு நேரங்களில் உலா வந்த சிறுத்தை ஓன்று மாட்டுப் பெட்டியில் உள்ளே நுழைந்து கன்றுக்குட்டியை தாக்கியது. அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்பகுதியில் வீடுகளில் நாய்களை வளர்த்தி வருவதினால் அவைகளை பிடிக்க சிறுத்தைகள் பகலிலே உலா வருகிறது.
பசியில் திரியும் சிறுத்தை இன்று அதிகாலை கன்றுக்குட்டியை அடித்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் இதனால் இன்று மாடுகளை தாக்கியது நாளை மனிதனை தாக்கக் கூடும் என்று மக்கள் அச்சம் அடைகிறார்கள்.
இதனைக் கண்டு வனவிலங்கு காப்பகத்தார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பேபி.




