கிணத்துக்கடவு சொக்கனூரில் தவெக-வில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு உற்சாக வரவேற்பு!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டனர்.

​சொக்கனூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின் ஊராட்சி செயலாளர் திரு. ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு தவெக-வில் இணைந்தனர்.

​நிகழ்ச்சியில் பேசிய செயலாளர் திரு. ஈஸ்வரன் இளைஞர்களின் இந்த சேர்க்கை கட்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாகவும் மக்களுக்கான நலப்பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதிதாக இணைந்த இளைஞர்கள் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தவெக-வின் வளர்ச்சிக்கு தீவிரமாகப் பாடுபடுவதாக உறுதி ஏற்றனர்.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகி சாந்தலிங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts