
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டனர்.


சொக்கனூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின் ஊராட்சி செயலாளர் திரு. ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு தவெக-வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய செயலாளர் திரு. ஈஸ்வரன் இளைஞர்களின் இந்த சேர்க்கை கட்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாகவும் மக்களுக்கான நலப்பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதிதாக இணைந்த இளைஞர்கள் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தவெக-வின் வளர்ச்சிக்கு தீவிரமாகப் பாடுபடுவதாக உறுதி ஏற்றனர்.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகி சாந்தலிங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.









