உடற்கல்வி இயக்குநர் பால்சாமி நினைவாக மினி மராத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி மறைந்த உடற்கல்வி இயக்குநர் பால்சாமி நினைவாக முதலாம் ஆண்டு மினி மராத்தான் போட்டி விளாத்திகுளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வி.மார்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் 14 கிமீ தொலைவு கொண்ட ஆண்களுக்கான போட்டிகள் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ், 2வது பரிசு ரூ 8 ஆயிரத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுரேஷ்குமார்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம் ஆகியோர் பெற்றனர்.

10 கிமீ தொலைவு கொண்ட பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஜென்சி,2வது பரிசு ரூ 8 ஆயிரம்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டம் புதூரை சேர்ந்த உதய தர்ஷினி ,பவானி ஆகியோர் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், வாக்கிங் ஃபிரண்ட்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர் வையணன், ஆசிரியர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் இம்மானுவேல், ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, காவல்துறை சார்பு ஆய்வாளர் நாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts