போத்தனூர் புற காவல் நிலையம் திறப்பு விழா – கோவை மாநகர ஆணையாளர் திறந்து வைத்தார்….

போத்தனூர் செட்டிபாளையம் ரோடு அன்பு நகரில் சோதனை சாவடி திறப்பு..!! கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அன்பு நகர் பகுதியில் டி 3 காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோதனைச் சாவடி திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாலும் நான்கு சக்கர வாகனங்கள் குப்பை லாரிகள் அதி வேகத்தில் பயணிப்பதாலும் விபத்துக்கள் நடைபெற்று வந்தன இது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் பொள்ளாச்சி சாலையை இணைக்கும் ஈச்சனாரி சாலை இருப்பதாலும் அரசு மதுபான கடை இருப்பதாலும் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகின்றன.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் எளிதாக தப்பிச் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது அதனால் காவல்துறையினர் நீண்ட நாட்களாக இந்த பகுதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வந்தன டி3 காவல் நிலைய அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு இது போன்ற விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உடனடியாக சோதனை சாவடி திறப்பதற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதன் காரணமாக பொதுமக்கள் ஒத்துழைப்போடு நேற்றைய தினம் சோதனை சாவடி திறக்கப்பட்டது. இந்த சோதனை சாவடி திறப்பு நிகழ்ச்சியை டி3 காவல்  நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சோதனை சாவடி திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அருகில் துணை ஆணையாளர் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரும், மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் மாநில நிர்வாகியுமான திரு. P.வெங்கடேஷ் அவர்கள் கூறுகையில்:-

போத்தனூர் சாராக உதவி ஆணையாளர் திரு.கனகசபாபதி மற்றும் டி3 போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அசோக் குமார் அவர்களின் நீண்ட முயற்சியால் இந்த புற காவல் நிலையம் சோதனை சாவடி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இப்பகுதியில் வெகுவாக குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது மேலும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் நாம் வசிக்கிறோம் என்பதை உணர்கிறார்கள். பெரும் முயற்சி எடுத்த போத்தனூர் உதவி ஆணையாளர் மற்றும் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,

ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts