
கோயம்புத்தூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸின் புகழ்பெற்ற 100 அடி சாலை ஷோரூம் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக மறுதிறக்கப்பட்டது. இதனையொட்டி, கட் மற்றும் அன்கட் வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பிரீமியம் நகைகள் உள்ளிட்ட புதிய வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ள “பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ” தொடங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மறுதிறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய தங்கத்தை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.150 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது. மேலும், மறுதிறப்பின் முதல் மூன்று நாட்களில் நடைபெறும் ஒவ்வொரு கொள்முதலுக்கும் உறுதியான பரிசு வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
மூன்று தளங்களைக் கொண்ட இந்த புதுப்பொலிவு பெற்ற ஷோரூம், நவீன உட்புற வடிவமைப்பு, விசாலமான ஷாப்பிங் வசதி, சர்வதேச தரத்திலான சூழல் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடத்துடன் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மற்றும் நவீன நகை வடிவமைப்புகளை ஒரே இடத்தில் ஆடம்பரமான முறையில் அனுபவிக்கும் வகையில் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சி குறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், “100 அடி சாலை ஷோரூமை மணப்பெண் நகைகள் மற்றும் பிரீமியம் ஆபரணத் தொகுப்புகளுடன் புதுப்பொலிவுடன் மீண்டும் திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதனையொட்டி ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ மூலம் புதுமையான வைர நகை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கோவை மக்களுக்கு மறக்க முடியாத ஆபரண ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவது எங்களது நோக்கம்” என்றார்.ஜூலை 31 முதல் தொடங்கியுள்ள இந்த சிறப்பு கண்காட்சியில், புதிய வடிவமைப்புகள், பிரத்யேக சலுகைகள் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் அனுபவத்தை பெற ஆபரண ஆர்வலர்களுக்கு ஜோய்ஆலுக்காஸ் அழைப்பு விடுத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





