
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நிதியுதவியின் கீழ் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சி. ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத்தின் திறப்பு விழா, சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத்தைத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேலும், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கமான ராக் அமைப்பின் ராக் அமைப்பின் நிறுவனர், சௌந்தரராஜன், அறக்கட்டளைக் குழுவின் தலைவர் பாலசுந்தரம், ராக் அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன்பள்ளித் தலைமை ஆசிரியை விமலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






