
கோவை துடியலூரில், கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ இன்று கோலாகலமாக தொடங்கியது.
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த கார் மேளா, செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் ஒப்புதலுடன், 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த முன்னணி கார் விற்பனை நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த பிரம்மாண்ட விற்பனைத் திருவிழாவை நடத்துகின்றன.
இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை, சிறிய பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் பயன்படுத்திய கார்கள் ஒரே இடத்தில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.மேலும், வாடிக்கையாளர்களுக்கு உடனடி வங்கிக் கடன், வாகனக் காப்பீடு, பழைய காருக்கு எக்ஸ்சேஞ்ச் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் கண்காட்சி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.வாகனங்களின் ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, நம்பகமான முறையில் கார்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்குப் பிடித்த கனவு காரை வாங்க விரும்புபவர்கள், செப்டம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மெகா கார் மேளாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ் உரிமையாளர் ராஜசேகர், அசைன் கார்ஸ் உரிமையாளர் அசைன் அலி,கே.பி.கே. மோட்டார்ஸ் கார்த்திக், ஐ.ஏ.ஜி. கார்ஸ் ராஜா, ரோட் மாஸ்டர் மணிகண்டன், ஆர்.ஆர். கார்ஸ் ராதாகிருஷ்ணன், விஜய் கார்ஸ் கோபி, ஜே.கே.கே. கார்ஸ் ஜெயராமன், சதீஷ்குமார், எஸ்.கே. கார்ஷாப் உரிமையாளர் சஞ்சீவ்குமார்
உள்ளிட்ட கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






